சமுத்திரக்கனியின் மனைவியாக நடிக்க இது தான் காரணம்... வனிதா

பிரசாந்தின் அந்தகன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் வனிதா விஜயகுமார். அவர் தற்போது அந்தகன் படப்பிடிப்பில் தான் கலந்து கொண்டு வருகிறார்.

 
சமுத்திரக்கனியின் மனைவியாக நடிக்க இது தான் காரணம்... வனிதா

சூப்பர் டூப்பரி ஹிட்டான ஆயுஷ்மான் குரானாவின் அந்தாதுன் படத்தை தமிழில் பிரசாந்தை வைத்து அந்தகன் என்கிற பெயரில் ரீமேக் செய்து வருகிறார் தியாகராஜன். அந்த படத்தில் வில்லியாக சிம்ரனும், போலீஸ் அதிகாரியாக சமுத்திரக்கனியும், பிரசாந்த் ஜோடியாக ப்ரியா ஆனந்தும் நடிக்கிறார்கள்.

சமுத்திரக்கனியின் மனைவியாக வனிதா விஜயகுமார் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தகன் படத்தில் நடிக்குமாறு என்னை கேட்ட பிறகே அந்தாதுன் படத்தை பார்த்தேன். அற்புதமாக திரைக்கதைக்காக தான் அந்த படத்தில் நடிக்க விரும்பினேன். அந்தகன் படத்தில் நடிப்பதை கௌரவமாக நினைக்கிறேன்.

From around the web