லோஸ்லியா ஆர்மியை மிஞ்சிய வனிதா ஆர்மி !!

இத்தனை நாட்கள் பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்றதற்கு ஒரே காரணம் வனிதா விஜயகுமார். கடந்த வாரம் யாரும் எதிர்பாராத விதத்தில் நேற்று எலிமினேட் செய்யப்பட்டார். வீட்டை விட்டு வெளியே வந்த வனிதா கமல்ஹாசனை சந்தித்துப் பேசினார். அப்போது தன்னுடைய வாழ்க்கை குறித்தும், தன்னுடைய தோல்விகளை குறித்தும் பல்வேறு கருத்துக்களை வெளிப்படையாக பேசினார். இதை பார்த்த பார்வையாளர்கள் ஒரேநாளில் வனிதா மீது ஆதரவு காட்டி வருகின்றனர். இதுதொடர்பாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வரும் நெட்டிசன்கள், பிக்பாஸ் வீட்டில் சண்டைக்காரியாக இருந்தாலும்
 

இத்தனை நாட்கள் பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்றதற்கு ஒரே காரணம் வனிதா விஜயகுமார்.

கடந்த வாரம் யாரும் எதிர்பாராத விதத்தில் நேற்று எலிமினேட் செய்யப்பட்டார். வீட்டை விட்டு வெளியே வந்த வனிதா கமல்ஹாசனை சந்தித்துப் பேசினார். அப்போது தன்னுடைய வாழ்க்கை குறித்தும், தன்னுடைய தோல்விகளை குறித்தும் பல்வேறு கருத்துக்களை வெளிப்படையாக பேசினார். இதை பார்த்த பார்வையாளர்கள் ஒரேநாளில் வனிதா மீது ஆதரவு காட்டி வருகின்றனர். இதுதொடர்பாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வரும் நெட்டிசன்கள், பிக்பாஸ் வீட்டில் சண்டைக்காரியாக இருந்தாலும் வனிதா மீது பாவம் ஏற்படுகிறது. துணிச்சலான, நேர்மையாக வனிதா நடந்துக் கொண்டது பாராட்டுக்குரியது.

லோஸ்லியா ஆர்மியை மிஞ்சிய வனிதா ஆர்மி !!

வனிதா இரண்டு முறை திருமணமாகி விவகாரத்து பெற்றவர். நிகழ்ச்சிக்குள் அவர் பிரவேசித்த பிறகு பலரும் இதுதொடர்பாக விமர்சித்து வந்தனர். ஆனால் நேற்று மேடையில் தன்னுடைய திருமண தோல்விகள் குறித்து வனிதா பேசியதை பார்த்து மாறிவிட்டனர். இதிலும் அவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது. 

மேலும் சிலர் பதிவிட்டுள்ளதில் பிக்பாஸ் நிகழ்ச்சி இனிமேல் சலிப்பை ஏற்படுத்தும். வனிதா வெளியேற்றப்பட்ட பிறகு நிகழ்ச்சியை இனிமேல் பார்க்க முடியாது. இனி பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பலரும் பார்க்க மாட்டார்கள் என்று சிலர் தெரிவித்துள்ளனர். 

வனிதா தன்னுடைய மகள்களுக்காக பணம் சம்பாதிக்க தான் நிகழ்ச்சிக்கு வந்தார். இன்னும் சில வாரங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் இருந்திருக்கலாம். அவரால் தான் இதுவரை பிக்பாஸ் சுவாரஸ்யமாக இருந்தது. இனிமேல் மொக்கையாக இருக்குமே என்று பார்வையாளர்கள் பலர் வருத்தம் தெரிவிக்கும் பதிவுகளும் வைரலாகியுள்ளன.  on[=#J9�

From around the web