விக்ரம் படத்தில் இணைந்த வாணிபோஜன்!!!

சின்னத்திரை வாணிபோஜன் தற்போது விக்ரமுடன் திரைப்படத்தில் இணைந்துள்ளார்.
 

சன் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வமகள்' சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் வாணி போஜன். அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஓ மை கடவுளே' படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். 

ஓ மை கடவுளே படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, லாக்கப் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் வாணி போஜன் அடுத்து நடிக்கும் படம் குறித்து தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் தற்போது வைரலாகி வரும் தகவல் என்னவென்றால் நடிகர் விக்ரம் நடிக்கும் 60-வது படத்தை இளம் இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருக்கிறார். இந்த படம் இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த ஆவலை கிளப்பி உள்ளது. காரணம் என்னவென்றால் இந்த படத்தில் விக்ரமின் மகன் துருவ் முதல்முறையாக தனது தந்தையுடன் சேர்ந்து நடிக்க இருக்கிறார். 

நடிப்பு அசுரனான விக்ரமும் அவரது மகனும் ஒரு சேர  திரையில் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் டார்ஜிலிங் பகுதியில் மார்ச் 3ஆம் தேதி துவங்க இருக்கிறது. தற்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் இந்தப் படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web