வந்துட்டேன்னு சொல்லு! அண்ணாத்த சூட்டிங்கிற்கு வந்துட்டேன்னு சொல்லு!

அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கிற்காக நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் புறப்பட்டார்!
 

தனது ஸ்டைலில் ஆளும் தனது நடிப்பாலும் என்று மக்கள் மனதில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார் நடிகர் ரஜினிகாந்த்.ஆரம்ப காலத்தில் வில்லனாக தோன்றி அதன் பின்னர் கதாநாயகனாக வலம் வந்தார் ரஜினிகாந்த். இன்று மக்கள் மனதில் நீங்காத நாயகனாக திகழ்ந்து வருகிறார் என்பது அவரது நடிப்பிற்கும் திறமைக்கும் உழைப்புக்கும் கிடைத்த பரிசுதான். மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த எந்திரன் என்ற திரைப்படம் மக்களிடையே நல்லதொரு வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

rajini

மேலும் இத் திரைப்படமானது வசூல் ரீதியாக நல்லதொரு வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக  உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். மேலும் இதனை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். மேலும் இவரது நடிப்பில் வெளியாகி இருந்த பாட்ஷா ,படையப்பா போன்ற படங்களும் மக்களிடம் நல்லதொரு வரவேற்பு பெற்று பெற்ற படம் .

மேலும் தற்போது இவர் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் அண்ணாத்த. இந்நிலையில் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கிற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டு சென்றுள்ளார். மேலும் அவர் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.  அவர் சென்னையிலிருந்து பட ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத் புறப்பட்டுள்ளார்.

சென்னையில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்க சில நாட்கள் சூப்பர்ஸ்டாருக்கு ஓய்வுக்குப் பின் ஹைதராபாத் புறப்பட்டு சென்றுள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. டிசம்பரில் படப்பிடிப்பில் பங்கேற்ற போது கொரோனா  ஏற்பட்டதால் சூட்டிங் ரத்தானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினார் என்ற தகவலும் வெளியானது.இத்திரைப்படத்தினை பிரபல இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார் என்பதும், திரைப்படமானது தீபாவளியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

From around the web