காமெடி பண்ணும் வானவராயன்....!

ரசிகர்களுக்கு சிரிப்பை கொடுக்கும் நடிகர் கிருஷ்ணா....!
 
காமெடி பண்ணும் நடிகர் கிருஷ்ணாவின் ட்விட்டர் பக்கம்....!

ரசிகர்களால் "வானவராயன்" என்று அழைக்கப்படுபவர் நடிகர் கிருஷ்ணா. இவர் வானவராயன் வல்லவராயன், வன்மம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து இருந்தார். இவரது நடிப்பில் வெளியாகி இருந்த "கழுகு" திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடைபோட்டது.

actor krishna

குறிப்பாக இவரது நடிப்பில் வெளியாகி இருந்த "யாமிருக்க பயமே" திரைப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் இவருடன் காமெடி நடிகர் கருணாகரன் மற்றும் நடிகை ஓவியா நடித்து இருந்தார்.

 இவர் நடித்திருந்த "யாக்கை" திரைப்படத்தில் "சொல்லி தொலையேன் மா " என்ற பாடலை நடிகர் தனுஷ் பாடியிருந்தார். இப்பாடல் மிகவும் வைரலாக பரவியது மேலும் இவர் நடிகர் தனுஷுடன் "மாரி 2" திரைப்படத்தில்நடித்து இருந்தார். மாரி 2 படத்தில் இவரது கெட்டப் ரசிகர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்தது. தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தான் வெளியிட்டுள்ள குறும்வீடியோ ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் தருமென எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web