’காட்டேரி’ ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்; என்ன காரணம்?

 

வைபவ், வரலட்சுமி நடிப்பில் டிகே இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவான ’காட்டேரி’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டே ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஆனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அவ்வப்போது மாற்றப்பட்டு வந்த நிலையில் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனா இரண்டாம்‌ அலை பரவி வருவதாக வெளியாகும்‌ தகவல்களின்‌ அடிப்படையில்‌, எங்கள்‌ தயாரிப்பு நிறுவனம்‌ சார்பில்‌ அனைவரின்‌ நலனையும்‌ கருத்தில்‌ கொண்டு சில முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இப்பொழுது நிலவும்‌ குழப்பமான மற்றும்‌ நிலையில்லாத்தன்மையை கருத்தில்‌ கொண்டும்‌, இத்திரைப்படத்தில்‌ பணியாற்றிய பல்வேறு தொழில்நுட்பக்கலைஞர்கள்‌ மற்றும்‌ தொழிலாளர்களின்‌ கடின உழைப்பு சரியான முறையில்‌ மக்களைச்‌ சென்றடைய வேண்டும்‌ என்ற நோக்கிலும்‌ எங்கள்‌ தயாரிப்பில்‌ டிசம்பர்‌ 25-ஆம்‌ தேதி வெளிவர இருக்கும்‌ “காட்டேரி” திரைப்பட வெளியீட்டை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக வருத்தத்துடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌. 

katteri

மேலும்‌ இந்த கொரோனாவின்‌ தாக்கம்‌ குறைந்தவுடன்‌ ‘காட்டேரி’ திரைப்படம்‌ வெளியாகும்‌ தேதி விரைவில்‌ அறிவிக்கப்படும்‌. இவ்வாறு ஞானவேல்ராஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

From around the web