வலிமை படத்தின் இரண்டாவது அப்டேட்: மோஷன் போஸ்டரை அடுத்து போஸ்டர்கள்!

 
valimai

தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் சற்றுமுன் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்

அட்டகாசமான ஸ்டைலான அஜித் இந்த போஸ்டர்களில் இருப்பதை பார்த்து அஜித் ரசிகர்கள் இந்த போஸ்டரை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பக்கம் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இன்னொரு பக்கம் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இரண்டு ஆண்டுகளாக அப்டேட் கேட்டுக்கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு ஒரே நாளில் அடுத்தடுத்து மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக், செகண்ட்லுக் போஸ்டரை வெளியிட்டு வலிமை படக்குழுவினர் மகிழ்ச்சியில் திண்டாட வைத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web