ஜாலி அரட்டையில் கண்கலங்கிய நடிகை.. ஏன் தெரியுமா?

நடிகை வைஷாலி ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் பேசிய நேரலை வீடியோ வெளியாகியுள்ளது.
 

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ், சன்.டிவியின் மகராசி மற்றும் ஜீ தமிழின் கோகுலத்தின் சீதை தொடர்களில் நடித்துவரும் நடிகை வைஷாலி ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் பேசிய நேரலை வீடியோவில் மறைந்த நடிகை சித்ராவுடனான நட்பு குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

“எனக்கு கல்யாணம்லாம் ஆகலங்க.. சன் டிவியில வரும் மகராசி சீரியல்க்காக தான் இந்த தாலியை அணிஞ்சிருக்கேன்” என்று ரசிகர்களுக்கு தமது தாலி்யுடன் இருக்கும் கெட்டப் குறித்து விளக்கினார்.  

பின்னர் சித்ராவுடனான நட்பு பற்றி ரசிகர்களின் கேள்விக்கு, “சித்து அக்காவோட ஃப்ரண்ட்ஷிப் பத்தி சொல்லணும்னா, எங்களோட ஃப்ரண்ட்ஷிப் கொஞ்ச நாளைக்கு தான், அதாவது 5,6 நாட்கள் தான் என்றாலும் அது ரொம்ப பெரிய ஃப்ரண்ட்ஷிப்பாக இருந்தது. ரொம்ப நெருக்கமாக என்னுடன் பழகினார். சித்ரா மிகவும் இனிமையாகவும் அனைவரிடத்திலும் ஜாலியாகவும் இருப்பவர். அவர் இருக்கும் இடத்தில் அனைவரையும் கலகலப்பாக வைத்திருப்பவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தான் முன்பை விட ஒல்லியாகிவிட்டதாக நினைப்பது உண்மை அல்ல, தான் எப்போதும் போலவே இருப்பதாகவும் ஜாலியாக குறிப்பிட்டுள்ளார்.

From around the web