அதிமுக தொண்டர்களை பாராட்டி டுவிட் போட்ட வைரமுத்து

 

திமுகவின் தீவிர ஆதரவாளரான கவிஞர் வைரமுத்து அவர்கள் திடீரென அதிமுக தொண்டர்களை பாராட்டி டுவிட் ஒன்றை பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவகம் சென்னை மெரினாவில் நேற்று திறக்கப்பட்டது என்பதும் ரூபாய் 80 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பிரம்மாண்டமான நினைவகத்தை பார்ப்பதற்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து அதிமுக தொண்டர்கள் குவிந்தனர் என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் ஜெயலலிதா நினைவகத்தை பார்க்க வந்த பலரும் அருகிலிருந்த கலைஞரின் நினைவகத்தையும் பார்த்தனர் என்று செய்தி வெளியான நிலையில் இதுகுறித்து திமுகவினர் பெருமை அடைந்ததாகவும் திமுக ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது 

vairamuthu

இந்த நிலையில் அதிமுகவினரின் கலைஞர் விசுவாசத்தை பாராட்டி கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாவது:

கலைஞர் நினைவிடத்தில்
அன்பு காட்டிய அ.இ.அ.தி.மு.க
தொண்டர்களைப் பாராட்டுகிறேன்;
வாழ்த்துகிறேன்.

இந்தப் பழைய பாசமும் நாகரிகமும்
அரசியலைத் தாண்டி
திராவிட இயக்கங்களில் 
தேனாகப் பரவட்டும்.

நெகிழ்கிறேன்; மகிழ்கிறேன்


 

From around the web