என்னைப்பற்றி வினா எழுப்புவது வீண், போய் வேலையைப் பாருங்கள்: வைரமுத்து ஆவேசம்

என்னைப் பற்றி வினா எழுப்புவதற்கு பதிலாக போய் வேலையைப் பாருங்கள் என்றும் மனித வளத்தையும் மனவளத்தையும் மாண்புறுத்துங்கள் என்றும் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கவிஞர் வைரமுத்து குறித்து கடந்த சில வருடங்களாகவே சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. குறிப்பாக சின்மயி விவகாரத்தில் அவர் சிக்கி நெட்டிசன்கள் மத்தியில் சின்னாபின்னமானது பெரும் சர்ச்சையனது. அது மட்டுமன்றி கடந்த ஒரு சில நாட்களாக அவரது பெயர்
 
என்னைப்பற்றி வினா எழுப்புவது வீண், போய் வேலையைப் பாருங்கள்: வைரமுத்து ஆவேசம்

என்னைப் பற்றி வினா எழுப்புவதற்கு பதிலாக போய் வேலையைப் பாருங்கள் என்றும் மனித வளத்தையும் மனவளத்தையும் மாண்புறுத்துங்கள் என்றும் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கவிஞர் வைரமுத்து குறித்து கடந்த சில வருடங்களாகவே சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. குறிப்பாக சின்மயி விவகாரத்தில் அவர் சிக்கி நெட்டிசன்கள் மத்தியில் சின்னாபின்னமானது பெரும் சர்ச்சையனது.

அது மட்டுமன்றி கடந்த ஒரு சில நாட்களாக அவரது பெயர் சமூக வலைதளங்களில் அதிகமாக அடிபட்டு வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து தனது டுவிட்டரில் கவிதை வடிவில் கவியரசர் வைரமுத்து ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது

நாட்டின் உயிரும் பொருளும்
மானமும் அறிவும்
இன்னற்படும் இந்த எரிபொழுதில்
நான் கவிஞனா பாடலாசிரியனா
நாவலாசிரியனா நாவலனா என்று சிலர்
வினாவெழுப்புவது வீண்.
நீங்கள் நினைக்கும் இடத்தில் நானில்லை.
நான் வெறும் மொழியாளன்.
வேலையைப் பாருங்கள்;
மனிதவளத்தை மனவளத்தை மாண்புறுத்துங்கள்

From around the web