திருந்தாத ஆரி, தவறை சரியான நேரத்தில் சுட்டிக்காட்டிய பாலா

 

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஆரி மீது இருக்கும் மிகப் பெரிய குற்றச்சாட்டு என்னவெனில் ஒரு கருத்தை பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென மற்றவர்களின் குறைகளை சுட்டிக் காட்டுவதுதான். உதாரணமாக நேற்று ரம்யாவிடம் அவருடைய அறிவுரை கூறிக்கொண்டிருக்கும் போதே திடீரென ரியோ எப்படிப்பட்டவர் பாலாஜி எப்படிப்பட்டவர் என்றும் மற்றவர்களின் கருத்துக்களை மக்கள் முன் பதிவு செய்ய அவர் தயங்கியதே இல்லை 

தான் மட்டும் நேர்மையானவர் என்றும் மற்றவர்கள் இந்த வீட்டில் சரியாக விளையாடவில்லை என்பதையும் அவ்வப்போது அவர் சுட்டிக்காட்டி வருகிறார். ஆனால் அதே நேரத்தில் சக போட்டியாளர்கள் திறமைகளை ஒருநாள் கூட அவர் வெகு குறைவாகவே பாராட்டி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

aari

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியின் இறுதியில் தான் மிகவும் கோபத்தின் காரணமாக தவறாக பேசி விட்டதாகவும் உங்கள் மீது தனக்கு எந்த விதமான காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்றும் அதனால் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் பாலாஜி ஆரியிடம் கூறினார்

அப்போது ஒரு விளக்கத்தை ஆரி கொடுத்து கொண்டிருக்கும் போது திடீரென ரியோவை இழுத்தார். அப்போது இடைமறித்த பாலாஜியின் நாம் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது நம்மை பற்றி மட்டும் பேசுங்கள் இன்னொருவரை பற்றி பேசாதீர்கள் என்று தடுத்து திருத்தினார்.

ஒருவரிடம் நேருக்கு நேர் பேசிக் கொண்டிருக்கும் போது இருவருடைய பிரச்சனைகளை மட்டும் பேசாமல் ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் இழுத்து கொண்டு இருப்பது ஆரியின் ஸ்டாட்டர்ஜியாக உள்ளது அதனை நேற்று சரியான நேரத்தில் சுட்டிக்காட்டிய பாலா, இந்த பழக்கத்தை நீங்களும் மாற்றிக் கொள்ளுங்கள், நானும் என்னுடைய தவறை திருத்திக் கொள்கிறேன் என்று கூறியது பாலாவை பிடிக்காதவர்களுக்கு கூட மகிழ்ச்சி அடையச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web