தண்ணீருக்கடியில் ஹனிமூன் அறை: வைரலாகும் காஜல் அகர்வாலின் இன்ஸ்டா போட்டோஸ்!

 

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் மாலத்தீவுக்கு ஹனிமூன் கொண்டாட சென்றார் என்பதும் தெரிந்ததே. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் சேர்ந்து ஹனிமூன் கொண்டாடும் விதவிதமான புகைப்படங்களை பார்க்கலாம்

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தண்ணீருக்கடியில் இருக்கும் ஹனிமூன் அறையில் தங்கி இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை காஜல் அகர்வால் பதிவு செய்துள்ளார் 

View this post on Instagram

Waking up to 🐠🐟🐡

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

சுற்றிலும் கடல் நீர் சூழ்ந்து இருக்கும் அந்த அறையில் விதவிதமான மீன்கள் கண்ணாடி வழியாக காட்சி அளிப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும் காஜல் அகர்வால் கொடுத்துவைத்தவர் என்றும் இன்ஸ்டாகிராம் பயனாளிகள் இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகிறார்கள்

தண்ணீருக்கு அடியில் உள்ள அறையில் ஹனிமூன் கொண்டாடும் காஜல் அகர்வாலின் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

View this post on Instagram

Am I looking at the fish or are the fish looking at me?

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

From around the web