கர்ணன் பட தவறை சுட்டி காட்டிய உதயநிதி ஸ்டாலின் 

உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கர்ணன் படம் தொடர்பான ஒரு முக்கிய கருத்தினை பதிவிட்டிருந்தார்.

 
கர்ணன் பட தவறை சுட்டி காட்டிய உதயநிதி ஸ்டாலின்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் கர்ணன். கலவையான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களுடன் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தை பலரும் பார்த்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படம் தொடர்பான பாராட்டுகளை தெரிவித்ததுடன் ஒரு முக்கிய கருத்தினை பதிவிட்டிருந்தார். அதில், “1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

From around the web