வடக்கேயிருக்கும் உங்கள் முதலாளிகள் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது: உதயநிதி

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக மின்சார ரிடிங் எடுக்காத நிலையில் திடீரென தற்போது எடுக்கப்பட்ட ஒரு மின்சார ரீடிங்கில் அதிக கட்டணம் வருவதாக புகார் எழுந்து வருகிறது குறிப்பாக 500 ரூபாய் 1000 ரூபாய் வரை செலுத்தப்பட்டு வந்த மின் கட்டணம் தற்போது 4000, 5000 ரூபாய் என வருவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர் இதுகுறித்து சினிமா பிரபலங்களும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் மேலும் இதுகுறித்து
 
வடக்கேயிருக்கும் உங்கள் முதலாளிகள் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது: உதயநிதி

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக மின்சார ரிடிங் எடுக்காத நிலையில் திடீரென தற்போது எடுக்கப்பட்ட ஒரு மின்சார ரீடிங்கில் அதிக கட்டணம் வருவதாக புகார் எழுந்து வருகிறது

குறிப்பாக 500 ரூபாய் 1000 ரூபாய் வரை செலுத்தப்பட்டு வந்த மின் கட்டணம் தற்போது 4000, 5000 ரூபாய் என வருவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர் இதுகுறித்து சினிமா பிரபலங்களும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

மேலும் இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் நடந்து வரும் வழக்கு ஒன்றில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொதுமக்கள் இருந்ததால் அதிக மின்சாரத்தை பயன்படுத்தியதாகவும் அதனால்தான் மின்சார கட்டணம் அதிகமாக வந்திருப்பதாகவும் அரசு தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திமுக இளைஞர் அணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், மின்கட்டண கொள்ளை குறித்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது:

ஊரடங்கால் 24 மணி நேரமும் மக்கள் வீட்டில் இருக்கின்றனர். யாருக்கும் ரீடிங் தெரிவதில்லை’ என நடத்தும் வேட்டையை நியாயப்படுத்தும் கூவத்தூர் கோஷ்டிக்கு மக்கள் தீர்ப்பு விரைவில் ஷாக் அடிக்கும். அப்போது வடக்கேயிருக்கும் உங்கள் முதலாளிகள் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது

From around the web