உதயநிதியும் ஓசூர் பெரியவரும்

நடிகரும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாட்களாக தொடர்ந்து ஒரு பெரியவரை புகழ்ந்து வருகிறார். அவர்தான் ஓசூரை சேர்ந்த 85 வயது நாராயணப்பா . இந்த தாத்தா 85 வயதிலும் திமுக நடத்தும் பேரணியில் கலந்து கொண்டிருப்பதை மனம் நெகிழ்ந்து பாராட்டியுள்ளார் உதய். இது குறித்து உதயநிதி கூறி இருப்பதாவது குடியுரிமை சட்ட எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்ற ஓசூரைச் சேர்ந்த 85 வயது நாராயணப்பா தாத்தாவைச் சந்தித்தேன். ‘ஓசூர்ல தலைவர் கலைஞர் கட்டித்தந்த சமத்துவபுரத்துலதான்
 

நடிகரும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாட்களாக தொடர்ந்து ஒரு பெரியவரை புகழ்ந்து வருகிறார். அவர்தான் ஓசூரை சேர்ந்த 85 வயது நாராயணப்பா .

உதயநிதியும் ஓசூர் பெரியவரும்

இந்த தாத்தா 85 வயதிலும் திமுக நடத்தும் பேரணியில் கலந்து கொண்டிருப்பதை மனம் நெகிழ்ந்து பாராட்டியுள்ளார் உதய்.

இது குறித்து உதயநிதி கூறி இருப்பதாவது

குடியுரிமை சட்ட எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்ற ஓசூரைச் சேர்ந்த 85 வயது நாராயணப்பா தாத்தாவைச் சந்தித்தேன். ‘ஓசூர்ல தலைவர் கலைஞர் கட்டித்தந்த சமத்துவபுரத்துலதான் இருக்கேன். உங்களையும் தலைவரையும் பார்த்ததே போதும்’ என்றார். ‘உங்களை பார்த்ததுல எனக்குத்தான் பெருமை’ என்றேன்.

‘உங்க எல்லா படங்களையும்  பார்த்துடுவேன். நீங்க மேயர் எலெக்‌ஷன்ல நிக்கும்போது நாந்தான் இங்கவந்து உங்களுக்காக வேலை செய்வேன். ‘நான்  மேயரால்லாம் வரமாட்டேன்’னு பேப்பர்ல சொல்லாதீங்க’ என்று  செல்லமாகக் கோபப்பட்டவர், ‘அடுத்தமுறை வரும்போது கர்நாடகா அவரைக்காய் எடுத்துட்டு வர்றேன்’ என்றார் .

‘எல்லா போராட்டங்கள்லயும் கலந்துப்பேன். இப்பக்கூட உனக்கு தில்லு இருந்தா என் மேல வழக்கு போடுனு சொல்லிட்டேன்’ என்றவரிடம், ‘உங்களுக்கு என்னங்கய்யா வேணும்’ என்றேன். ‘ஓசூர் போனதும் சொல்றேன்: என்றபடி என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார். இந்த பிணைப்புதான் திமுக. என்று கூறி உள்ளர் உதய்

From around the web