காஜல் அகர்வாலை அடுத்து மாலத்தீவில் மேலும் இரண்டு தமிழ் நடிகைகள்!

 

காஜல் அகர்வாலை அடுத்து மேலும் இரண்டு நடிகைகள் மாலத்தீவு சென்றிருப்பதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பை தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு மாலத்தீவுக்கு தேனிலவு கொண்டாட சென்றார் என்பது தெரிந்ததே. அவர் தனது தேனிலவு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் என்பதும் அந்த பதிவுகள் அனைத்தும் மிகப் பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே 

vedhika

இந்த நிலையில் தற்போது காஜல் அகர்வாலை அடுத்து மேலும் இரண்டு தமிழ் நடிகைகளின் மாலத்தீவு சென்றிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. காஞ்சனா உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்த வேதிகா மாலத்தீவுக்கு சென்றுள்ளதாகவும் அவர் மாலத்தீவில் விமானத்தில் இருந்து இறங்குவது போன்ற ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் அதே விமானத்தில் கார்த்தி, சூர்யாவுடன் ஒரு சில படங்களில் நடித்த நடிகை பிரணிதா சுபாஷ் மாலத்தீவு சென்றுள்ளார். இது குறித்த புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது 

வேதிகா, ப்ரணிதா ஆகிய இருவரும் தனித் தனியாகவே மாலத்தீவு சென்று உள்ளார்கள் என்றும் தீபாவளி கொண்டாட்டத்திற்காக அவர்கள் மாலத்தீவு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மாலத்தீவில் தமிழ் சினிமா நடிகைகளின் கூட்டம் அதிகமாகிக் கொண்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web