ஒரே நாளில் இரண்டு ‘மாஸ்டர்’ அறிவிப்புகள்: விஜய் ரசிகர்கள் உற்சாகம்

 

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி கிட்டதட்ட ஒன்பது மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் அந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை

இந்த நிலையில் இன்று ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் சென்சார் தகவல்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் சென்சார் தகவல் அதிகாரபூர்வமாக வெளிவந்ததை அடுத்து இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் இல்லை என்றும் இந்த படம் திரையரங்குகளில் வெளிவரும் என்றும் கூறப்பட்டு வருகிறது 

மேலும் இந்த படம் பொங்கல் தினத்தில் வெளிவருவது கிட்டத்தட்ட உறுதி என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இன்று மாஸ்டர் படத்தின் தெலுங்கு பதிப்பின் பாடலொன்றின் வெளியாகும் அறிவிப்பு வந்துள்ளது 

master

தமிழில் வெளியான ’குட்டி ஸ்டோரி’ என்ற பாடலின் தெலுங்கு பதிப்பான ’சிட்டி ஸ்டோரி’ என்ற பாடல் நாளை மதியம் 12.15 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் ‘மாஸ்டர்’ படத்தின் சென்சார் தகவல் மற்றும் தெலுங்கு ‘மாஸ்டர்’ படத்தின் பாடல் ரிலீஸ் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்

இதே கையோடு ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துவிட்டால் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு விஜய் ரசிகர்கள் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web