நதியா வீட்டில் இரண்டு ஹீரோயின்கள்: வைரலாகும் புகைப்படம்!

 

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் நதியா என்பது தெரிந்ததே. பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் பல வெற்றிப்படங்களில் நடித்தார்

திருமணத்திற்கு முன்னர் ரஜினியுடன் ராஜாதி ராஜா என்ற படத்தில் நடித்த பின் அமெரிக்க மாப்பிள்ளை சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சனம் மற்றும் ஜனா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

nadhiya

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு சில திரைப் படங்களில் மட்டும் நடித்து வரும் நதியா, இன்று தனது குடும்பத்துடன் கிறிஸ்மஸ் கொண்டாடியதை தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தோடு வெளியிட்டுள்ளார் 

நதியா தனது கணவர் மற்றும் இரண்டு மகள்கள் உள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். அவருடைய இரண்டு மகள்களும் ஒரு ஹீரோயினுக்கு உரிய அனைத்து தகுதிகளும் கொண்டவர்களாக இருப்பதால் விரைவில் தமிழ் சினிமாவில் இரண்டு அழகான ஹீரோயின்கள் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் நதியா ஏற்கனவே பல பேட்டிகளில் தனது மகள்கள் நடிக்க வர மாட்டார்கள் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web