மஞ்சளில் புற்றுநோயை அழிக்கும் ஆற்றல்: சென்னை ஐ.ஐ.டி ஆய்வு முடிவு

சென்னை ஐஐடியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றலை மஞ்சளுக்கு உண்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சென்னை ஐஐடியில் உள்ள உயிரிதொழில்நுட்பத் துறை பேராசிரியர் ரமா சங்கர் வர்மா என்பவரது தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் Pharmacological Reports என்கிற இதழில் வெளியாகியுள்ளது. இதில் புற்றுநோய் செல்களை அழிக்கக் கூடிய கர்குமின் என்கிற வேதிப்பொருள் மஞ்சளில் அதிகம் இருப்பதாகவும், மஞ்சளில் உள்ள இந்த கர்குமின்கள் நச்சுத்தன்மை இல்லாதவைகளாக இருந்துள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கர்குமின்கள்
 

மஞ்சளில் புற்றுநோயை அழிக்கும் ஆற்றல்: சென்னை ஐ.ஐ.டி ஆய்வு முடிவு

சென்னை ஐஐடியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றலை மஞ்சளுக்கு உண்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

சென்னை ஐஐடியில் உள்ள உயிரிதொழில்நுட்பத் துறை பேராசிரியர் ரமா சங்கர் வர்மா என்பவரது தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் Pharmacological Reports என்கிற இதழில் வெளியாகியுள்ளது.

இதில் புற்றுநோய் செல்களை அழிக்கக் கூடிய கர்குமின் என்கிற வேதிப்பொருள் மஞ்சளில் அதிகம் இருப்பதாகவும், மஞ்சளில் உள்ள இந்த கர்குமின்கள் நச்சுத்தன்மை இல்லாதவைகளாக இருந்துள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கர்குமின்கள் இரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜைகளில் புற்றுநோயை உண்டாக்கக் கூடிய லுக்கிமியா செல்களை அழிப்பதற்கான சிகிகிச்சைக்கு உதவும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி ப்ராஸ்டேட் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் , பெருங்குடல் புற்றுநோய் ஆகிய நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு என்றும், நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மஞ்சள் பெரிதும் உதவுவதாக இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

நம்முடைய முன்னோர்கள் மஞ்சளின் மகிமை குறித்து ஏற்கனவே பல குறிப்புகளில் கூறியுள்ள நிலையில் தற்போது ஐஐடி ஆய்வே மஞ்சள் குறித்து ஆய்வு செய்து அதன் பெருமையை உலகிற்கு உணர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web