நடிகர் சிவகுமார் மீது திருப்பதி தேவஸ்தானம் வழக்குப்பதிவு

திருப்பதி ஏழுமலையான் கோயில் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் சிவகுமார் மீது திருப்பதி தேவஸ்தானத்தின் விஜிலன்ஸ் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சூர்யா, கார்த்தி ஆகியோர்களின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான சிவகுமார் திருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியதாகவும், இதனால் ஏழுமலையான் பக்தர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் தமிழ்மாயன் என்பவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துள்ளார். மேலும், திருமலையில் தவறான செயல்கள் நடைபெறுவதாகவும் எனவே ஏழுமலையான்
 

நடிகர் சிவகுமார் மீது திருப்பதி தேவஸ்தானம் வழக்குப்பதிவு

திருப்பதி ஏழுமலையான் கோயில் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் சிவகுமார் மீது திருப்பதி தேவஸ்தானத்தின் விஜிலன்ஸ் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சூர்யா, கார்த்தி ஆகியோர்களின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான சிவகுமார் திருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியதாகவும், இதனால் ஏழுமலையான் பக்தர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் தமிழ்மாயன் என்பவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துள்ளார்.

மேலும், திருமலையில் தவறான செயல்கள் நடைபெறுவதாகவும் எனவே ஏழுமலையான் கோயிலுக்கு யாரும் செல்ல வேண்டாம் என சிவகுமார் கூறியிருந்தாகவும் தமிழ்மாயன் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் தேவஸ்தானம் அளித்த புகாரின் அடிப்படையில் திருமலை இரண்டாவது நகர போலீசார் சிவகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழம்பெரும் தமிழ் நடிகர் ஒருவர் மீது திருப்பதி தேவஸ்தானம் போலீசில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web