உண்மையிலேயே அவர் மிகப்பெரிய ஜாம்பவான் தான்! சக நடிகர் பேட்டி!

நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தி அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் பிரபல நடிகர் முனிஸ்காந்த்!
 
உண்மையிலேயே அவர் மிகப்பெரிய ஜாம்பவான் தான்! சக நடிகர் பேட்டி!

தாம் கூறும் நகைச்சுவையிலும் சமூக கருத்துக்கள் வேண்டும் என்று தனது நடிப்புகளில் ஒவ்வொன்றிலும் சமூகத்தினை கொண்டு திரைப்படங்களில் நடித்திருந்தனர் நடிகர் விவேக். நடிகர் விவேக் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அனைவரிடமும் சகஜமாக பழகும் பண்பும் கொண்டவர். இத்தகைய நடிகர் சுற்றுசூழல் மீதும் மிகுந்த அக்கறையும் கொண்டவர். மேலும் அவரின் பெயரில் லட்சக்கணக்கான மரங்கள் தமிழகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்பெயர் பெற்ற நடிகரான விவேக் இன்று காலை உயிரிழந்தது மிகுந்த சோகத்தை அளித்துள்ளது.

vivek

அதன்படிநேற்றைய தினம் மாரடைப்பின் காரணமாக சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறி தமிழகத்தை மிகுந்த சோகத்தில் தள்ளியது. மேலும் அவரின் உடலுக்கு ரசிகர்கள் பலரும் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். மேலும் திரைத்துறையினர் பலரும் அவரின் வீட்டிற்கு வந்து அஞ்சலி செலுத்தினர். மேலும் அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். தற்போது அவரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இதில் பல பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அவர் கொண்டு செல்லப்படுகிறார்.

இந்நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தி அதன்பின்னர் பேட்டியளித்தார் பிரபல நடிகர் முனிஸ்காந்த். அதன்படி அவர் கூறினார், நான் அவரை பார்த்து வளர்ந்தவன் என்றும் கூறினார். மேலும் கருத்துக்களை அதுவும் காமெடியர்கள் கருத்து கூறினால் யாரும் ஏற்க மாட்டார்கள் ஆனால் தனது காமெடியில் கருத்துகளை கூறி வந்த இவர் மிகப்பெரிய ஜாம்பவான் என்றும் அவர் கூறினார். மேலும் 2020இல் மிகப் பெரிய இழப்புகளை சந்தித்துள்ளோம். தற்போது 2021இல் இவரின் இழப்பு மிகப்பெரியதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

From around the web