த்ரிஷாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு: எந்த ஓடிடியில் தெரியுமா?

 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா நடித்த திரைப்படம் ஒன்றின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

கடந்த 1999 ஆம் ஆண்டு திரையுலகில் நுழைந்தவர் த்ரிஷா. கடந்த 21 ஆண்டுகளாக கதாநாயகியாக நடித்து வரும் அவர் தற்போது சுமார் அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார்

த்ரிஷா நடித்து முடித்துள்ள படங்களில் ஒன்று ’பரமபதம் விளையாட்டு’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் கடந்த 2019ஆம் ஆண்டு முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஏற்கனவே ஒரு சில ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு ஒரு சில காரணங்களால் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

த்ரிஷா , பரமபதம் விளையாட்டு, ஹாட்ஸ்டார்,

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகாது என்றும் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 

த்ரிஷா, நந்தா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் படத்தை திருஞானம் என்பவர் இயக்கியுள்ளார். அம்ரேஷ் கணேஷ் என்பவர் இசையில் உருவான இந்த படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் திரில்லர் படமான இந்த படம் த்ரிஷாவுக்கு மேலும் ஒரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web