திரையரங்குகளில் வெளியானது ட்ரிப் திரைப்படம்....!

நடிகை சுனைனா  நடித்துள்ள ட்ரிப் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது...,
 
தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை சுனைனா தான் நடித்துள்ள  ட்ரிப் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்...,

நீர்ப்பறவை, மாசிலாமணி போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக  நடித்துள்ளவர் நடிகை சுனைனா .இவர் நடிப்பில் உருவாகியிருந்த "ட்ரிப்" திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.இவரது நடிப்பில் வெளியாகிய காதலில் விழுந்தேன் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

trip

பிரபல காமெடி நடிகரான யோகி பாபு நடித்துள்ளார் அண்மைக்காலங்களில் யோகி பாபுவின் காமெடி மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தது .குறிப்பாக இவர் நடிப்பில் வெளியாகிய "ரெமோ" திரைப்படத்தில் இவரது காமெடி காட்சிகள் மக்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது.இவர் கூர்கா, தர்மபிரபு கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

மேலும் இத்திரைப்படத்தில் பிரபல முன்னணி காமெடி நடிகர் கருணாகரன் இணைந்து நடித்துள்ளார் .இவர்கள் மூவரின் கூட்டணியில் வெளியாகிய திரைப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது வெளியாகியுள்ள ட்ரிப் திரைப்படத்தின் போஸ்டரை நடிகை சுனேனா தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்.

From around the web