"லவ்வர்ஸ் டே க்கு" செம ட்ரீட்ப்பா...!

லவ்வர்ஸுக்கு ட்ரீட் கொடுத்த கலையரசனின் காதல் பாடல்...,
 
வெளியாகியது கலையரசன் நடிப்பில் உருவாகிய "கடல் தாண்டி வந்தாய்"...,

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது "மெட்ராஸ்" திரைப்படம். இத்திரைப்படத்தில் கார்த்தியுடன் நடிகர் கலையரசன் நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் நடிகர் கலையரசன் நடிப்பு அனைவரிடமும் வரவேற்பு பெற்று அவருக்கு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது. குறிப்பாக இப்படத்தில் அன்பு என்ற பெயரில் நடித்திருப்பார். இதனால் நடிகர் கலையரசன் "அன்புஅண்ணா" என்று ரசிகர்களிடையே இன்றும் அழைக்கப்பட்டு வருகிறார்.

kalaiyarasan

மேலும் நடிகர் கலையரசன் "லேடி சூப்பர் ஸ்டார்" என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாராவுடன் என்ற "ஐரா"திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் நடிகர் தினேஷ் உடன் "அட்டகத்தி" என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியாகிய "ராஜா மந்திரி" என்ற திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. நடிகர் கலையரசன், "சூப்பர் ஸ்டார்" என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்துடன் "கபாலி" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் "அதே கண்கள்", "டார்லிங் 2 "போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் வெளியாகி உள்ள பாடல் "கடல் தாண்டி வந்தாய்". இப்பாடலின் வீடியோ வெளியாகி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்பாடல் காதல் சம்பந்தமான பாடல் என்பதால் வர இருக்கும் "லவ்வர்ஸ் டேக்கு" இப்பாடல் காதலர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது என காதலர்கள் மத்தியில் கூறப்பட்டு வருகிறது.

From around the web