மொக்கையான 3 புரமோக்கள்: என்ன ஆகுமோ இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய 3 புரோமோக்களும் சுமாராக இருந்ததால் இன்றைய நிகழ்ச்சி எப்படி இருக்குமோ என்ற அச்சம் பார்வையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசன் இருந்தும் கொஞ்சம் கூட சுவாரஸ்யம் சுத்தமாக இல்லாமல் இருந்ததால் அதிருப்தியில் இருந்த பார்வையாளர்கள் இன்றாவது சுவராசியமாக இருக்குமா என்று எதிர்பார்த்தனர் 

ஆனால் இன்றைய புரொமோவை பார்க்கும் போது இன்றைய நிகழ்ச்சியை பார்க்கும் ஆர்வமே வரவில்லை என்பதுதான் உண்மையாக இருக்கிறது. முகமூடியை கிழிக்கும் முதல் புரமோவும், எவிக்சன் குறித்து கமலஹாசன் பேசும் இரண்டாவது புரமோவும் செம மொக்கையாக இருந்த நிலையில் சற்று முன் வெளியான மூன்றாவது புரமோவிலும் எதுவுமே இல்லை

கேப்ரில்லாவிடமும், சுரேஷ் இடமும் கமல் பேசுவதும் எந்த சுவராஸ்யம் அளிக்கவில்லை எனவே இன்றைய இன்றைய நிகழ்ச்சியும் சுவாரஸ்யம் இல்லாவிட்டால் பொதுமக்கள் அனைவரும் ஐபிஎல் போட்டியை பார்க்க சென்று விடும் அபாயம் இருப்பதை உணர்ந்து இனியாவது அடுத்து வரும் நாட்களில் கமல்ஹாசன் சுவராசியமாக சனி ஞாயிறு நாட்களில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது 


 


 

From around the web