ஃபினாலே டாஸ்க்கில் முதலிடம்: இறுதி போட்டிக்கு தகுதி பெற்றவர் இவர்தானா?

 

 பிக்பாஸ் வீட்டில் தற்போது டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இந்த டாஸ்க்கில் வெற்றி பெறுபவர்கள் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார் மற்றும் இந்த வாரத்தில் எவிக்சன் பட்டியலில் இருந்து விடுவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் தற்போது முதல் முதல் நான்கு சுற்றுக்களின் முடிவில் இரண்டாம் இடத்தில் இருந்த ரியோ, இன்று நடைபெறும் ஐந்தாவது சுற்றில் முதலிடம் பெற்று 7 மதிப்பெண்களை பெற்று முதல் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. எனவே இத்துடன் இந்த டாஸ்க் முடிவுக்கு வந்தால் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றவர் ரியோ என்று அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

rio

ஒருவேளை இன்னும் டாஸ்குகள் மீதம் இருந்தால் அடுத்துவரும் டாஸ்குகளின் முடிவை பொறுத்து தான் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றவர் யார் என்பதை கணிக்க முடியும். இந்த டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் ரம்யா அல்லது பாலாஜி ஆகிய இருவரில் ஒருவர் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரியோ திடீரென இதில் வெற்றி பெற்றது போல் தெரிந்தது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web