நாளை வருகிறது "டிக்கிலோனா"  படத்தின் "சிங்கிள் ட்ராக்"!

"கே ஜெ ஆர் ஸ்டுடியோஸ்" தனது ட்விட்டர் பக்கத்தில் "டிக்கிலோனா  படத்தின் சிங்கிள் ட்ராக்" நாளை வெளியாகும் என கூறியுள்ளது!
 
"கே ஜே ஆர் ஸ்டுடியோஸ்" ட்விட்டர் பக்கத்தில் காணப்படும் "டிக்கிலோனா" படத்தை பற்றிய தகவல்!

ஆரம்பத்தில் காமெடியனாக தோன்றி இன்று பெரிய கதாநாயகனாக நடித்துக் கொண்டிருப்பவர் "நடிகர் சந்தானம்". இவரின் நடிப்பில் வெளியாகிய "என்றென்றும் புன்னகை" என்ற திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இத்திரைப்படத்தில் "நடிகர் ஜீவா" கதாநாயகனாக தோன்றியிருந்தார். நடிகர் ஜீவாவுக்கு "நடிகை திரிஷா" ஜோடியாக நடித்திருந்தார்.

dikkiloona

மேலும் சந்தானம் "தளபதி" விஜய் உடன் "தலைவா" என்ற படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் "சூப்பர் ஸ்டார்" என்று அழைக்கப்படும் ரஜினிகாந்துடன் "எந்திரன்"" என்ற மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எந்திரன் திரைப்படத்தினை இயக்குனர் "சங்கர்" இயக்கினார். இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் "உலக அழகியான ஐஸ்வர்யா ராய்" நடித்திருந்தார்.

மேலும் நடிகர் சந்தானம், "விக்ரம்"," சூர்யா"," தனுஷ்" போன்ற பல பிரபல நட்சத்திரங்கள் உடனும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காமெடியனாக நடித்த இவர் தற்போது "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்", "டக்கால்டி" போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக தோன்றி இன்று மிகப்பெரிய நடிகராக நடித்து கொண்டுள்ளார்.

தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "டிக்கிலோனா" .இத்திரைப்படத்தில் இவருடன் "நடிகை அனகா" நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகரான "யோகி பாபு" நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இத்திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக திகழ்ந்த பிரபலப் பந்துவீச்சாளர் "ஹர்பஜன் சிங்"கும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் "சிங்கிள் ட்ராக்" நாளை வெளியாகும் என  "கே ஜே ஆர் ஸ்டுடியோஸ்" தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இத்தகவல் நடிகர் சந்தானத்திற்கும் அவரது ரசிகர்களுக்கும் இன்பத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.

From around the web