நாளை வருகிறார் "கர்ணன்!"

"கர்ணன்" படத்தின் "சிங்கிள் ட்ராக்" நாளை வெளியாகும்!
 
"இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்"  ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள  இன்பத்தகவல்!

இயக்குனர் "வெற்றிமாறன்" இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் "அசுரன்".இத்திரைப்படத்தில் வெளியாகிய ஒவ்வொரு சண்டைக்காட்சிகளும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.மேலும் இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியாகிய "வடசென்னை" என்ற திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் "வட சென்னை2" என்ற திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் இடையே இன்றளவும் கேள்விகள் வருகின்றன.

karnan

சில நாட்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் நடித்திருக்கும் "ஜகமே தந்திரம்" என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நடிகர் தனுஷ் நம்பிக்கை கூறி இந்த நிலையில், கர்ணன் படத்தின் "ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்" வெளியாகி அவரது ரசிகர்களுக்கும் அவருக்கும் ஒரு ஆறுதலாக இருந்தது. மேலும் அந்த  அந்த பஸ்ட் லூக் போஸ்டர் வைரலாக பரவியது.

நடிகர் தனுஷ் நடிக்கும் "கர்ணன்" திரைப்படத்தினை பிரபல இயக்குனர் "மாரி செல்வராஜ்" இயக்கியுள்ளார்.இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் "சந்தோஷ் நாராயணன்" இசை அமைத்துள்ளார். தற்போது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் இத்திரைப்படத்தின் "சிங்கிள் டிராக்" வெளியாகும் தேதியை அறிவித்து தனுஷ் ரசிகர்களை இன்பத்திற்கு ஆளாகியுள்ளார். கர்ணன் படத்தின்  "சிங்கிள் ட்ராக்" ஆனது நாளை வெளியாகும் என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனைக் காணும் நடிகர் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்ப்புடன் சந்தோஷத்துடனும் காத்துக் கொண்டுள்ளனர்.

From around the web