ஒண்ணு சேர்ந்துட்டாங்கய்யா ஆரியும் பாலாஜியும்: இதைத்தான் எதிர்பார்த்தோம்!

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான இரண்டாவது புரமோ வீடியோவில் இருந்த மாஸ் காட்சிகளை பார்வையாளர்கள் கொண்டாடி வருகின்றனர் 

இன்றைய புரோமோ வீடியோவில் பாலா பேசுகையில் ’நானும் ஆரியும் இந்த வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு இருப்பதால் தான் மற்ற போட்டியாளர்களுக்கு பிரச்சனையாக இருப்பதாகவும் நாங்கள் இருவர் மட்டுமே பிரச்சினையாக இருப்பதாக அனைவரும் சொல்லி வருவதாகவும் கூறினார் 

உண்மையில் நானும் சேஃப் கேம் ஆடவில்லை, ஆரியும் சேஃப் கேம் ஆடவில்லை. எங்களை வைத்து தான் எல்லோரும் சேஃப் கேம் ஆடி வருகின்றனர். நீங்கள் எல்லோரும் சேஃப் கேம் ஆடாததால் தான் இந்த பிரச்சனை உள்ளது என்றும் அவர் கூறினார் 

ramya

பாலாஜியின் இந்த கருத்தை கேட்டு முடித்தவுடன் ஆரி அவருக்கு பாராட்டு தெரிவித்தார். அதேபோல் பாலாஜி பேசிக்கொண்டிருக்கும்போது ரம்யாவின் கைகள் நடுங்கியது என்பதும் ரியோவின் முகம் சுருங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது

மொத்தத்தில் இத்தனை நாள் பாலாஜி மற்றும் ஆரியை கெட்டவர்களாக காண்பித்து தங்களை நல்லவர்களாக காண்பித்துக் கொண்டிருந்த மற்ற போட்டியாளர்களின் முகத்திரையை கிழித்த பாலாஜிக்கு ஆரியின் ரசிகர்களே பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்தநிலையில் ஆரியம் பாலாஜியும் எப்பொழுதெல்லாம் ஒன்று சேர்கிறார்களோ அப்போதெல்லாம் மாஸாக இருக்கும் என்றும் அந்த வகையில் இன்றும் அந்த மாஸ்ஸை பார்க்க முடிந்தது என்றும் இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம் என்றும் பார்வையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்


 

From around the web