இன்று என் பெயருக்கு உயிர் கொடுத்த நாள்: விஜய் குறித்து தமிழ் நடிகர்!

 

தமிழ் நடிகர் சௌந்தரராஜா தனது டுவிட்டரில் இன்று என் பெயருக்கு தளபதி விஜய் அவர்கள் உயிர் கொடுத்த நாள் என்று ஒரு டுவிட்டை பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த நிலையில் நேற்றுடன் பிகில் இசை வெளியீட்டு விழா நடந்து ஒரு வருடம் ஆன நிலையில் நடிகர் சௌந்தரராஜா தனது டுவிட்டரில் ஒரு பதிவு செய்துள்ளார் 

பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சௌந்தரராஜா குறித்து விஜய் பேசிய வீடியோவையும் அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் விஜய் பேசியதாவது: பிகில் படப்பிடிப்பின்போது ஒரு நல்ல நண்பரை சந்தித்தேன். அவர் தான் சௌந்தர்ராஜன். அவரிடம் பேசிய போது அடிக்கடி அவர் பயன்படுத்தும் வார்த்தை ’மண்ணுக்கும் மக்களுக்கும்’ என்பதுதான். இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார். மேலும் அவர் நண்பர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர். இன்னும் சொல்லப்போனால் நண்பர்களுக்காக உயிரையும் கொடுக்கத் தயங்காதவர்’ என்று விஜய் பேசினார்

விஜய்யின் இந்த பேச்சுக்கு நெகிழ்ச்சி அடைந்த நடிகர் சௌந்தரராஜா இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இன்று ..! இதே நாள் போன வருஷம்  செப்டம்பர் 19, 2019 என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்., தளபதி விஜய் அண்ணா என் பெயருக்கு ஒரு உயிர் கொடுத்த நாள்..! என்றும் மறவேனோ இந்த நாளையும் என் அன்பு தளபதி விஜய் அண்ணனையும்..! என்று குறிப்பிட்டுள்ளார்


 

From around the web