களத்துல இறங்கணும், குத்துதே குடையுதேன்னு புலம்ப கூடாது! கமல் சொல்வது யாரை?

ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் மட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி கூடுதல் விறுவிறுப்புடன் இருந்து வரும் நிலையில் சற்றுமுன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் கமல், மும்தாஜை மறைமுகமாக குத்தி காட்டுவது போல் தெரிகிறது. ஓட்டு வேண்டும் என்றால் களத்தில் இறங்கி வேலை செய்யணும், அதைவிட்டு விட்டு மற்றவர்கள் ஓட்டு வாங்குவதை நினைத்து பதறக்கூடாது, குத்துதே குடையுதே என்று சொல்லக்கூடாது என்று கூறுகிறார். கமல்ஹாசன் இந்த
 

களத்துல இறங்கணும், குத்துதே குடையுதேன்னு புலம்ப கூடாது! கமல் சொல்வது யாரை?

ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் மட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி கூடுதல் விறுவிறுப்புடன் இருந்து வரும் நிலையில் சற்றுமுன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் கமல், மும்தாஜை மறைமுகமாக குத்தி காட்டுவது போல் தெரிகிறது. ஓட்டு வேண்டும் என்றால் களத்தில் இறங்கி வேலை செய்யணும், அதைவிட்டு விட்டு மற்றவர்கள் ஓட்டு வாங்குவதை நினைத்து பதறக்கூடாது, குத்துதே குடையுதே என்று சொல்லக்கூடாது என்று கூறுகிறார். கமல்ஹாசன் இந்த கருத்தை மும்தாஜூக்கு கூறுகிறாரா? அல்லது தனது கட்சிக்கு அவர் மறைமுகமாக வாக்கு சேகரிக்கின்றாரா? என்ற சந்தேகத்தை டுவிட்டர் பயனாளிகள் கிளப்பி வருகின்றனர்.

கமல்ஹாசன் ஆரம்பத்தில் இருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சியை தனது அரசியலுக்கும் அவ்வப்போது பயன்படுத்தி வருகிறார் என்பது தெரிந்ததே/ அந்த வகையில் இந்த நிகழ்ச்சி இன்னும் ஒருசில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் கமல்ஹாசன் அரசியல் பொடி வைத்தும் பேசுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web