சுஷாந்த் சிங் தற்கொலை எதிரொலி: தமிழக ரசிகர் ஒருவர் தற்கொலை அதிர்ச்சி தகவல்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது வீட்டில் மன அழுத்தம் காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி பாலிவுட் திரையுலகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது இந்த நிலையில் சுஷாந்த்சிங்கின் தற்கொலையை ஜீரணிக்க முடியாமல் வட இந்தியாவில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்றும் ஒரு ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார் என்றும் செய்திகள் வெளியாகின இந்த நிலையில் தற்போது தமிழகத்தை
 
சுஷாந்த் சிங் தற்கொலை எதிரொலி: தமிழக ரசிகர் ஒருவர் தற்கொலை அதிர்ச்சி தகவல்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது வீட்டில் மன அழுத்தம் காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி பாலிவுட் திரையுலகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது

இந்த நிலையில் சுஷாந்த்சிங்கின் தற்கொலையை ஜீரணிக்க முடியாமல் வட இந்தியாவில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்றும் ஒரு ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார் என்றும் செய்திகள் வெளியாகின

இந்த நிலையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த சுஷாந்த்சிங் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தினால் மனமுடைந்த கோவையை தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், இவர் சிறுவயதில் இருந்தே பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தீவிர ரசிகர் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சுஷாந்த் மரணத்தால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இவர் இருந்ததாகவும், இதனையடுத்து, கடிதம் எழுதி வைத்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து கோவை போலீசார் வழக்கு பதிவு செய்த தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

From around the web