இந்த வாரம் கவினுக்கு குறும்படம் நிச்சயம்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றையை எபிசோட்டில், தன்னுடைய சாக்லேட்டை லோஸ்லியாவுக்கு வழங்கியதால் கவின்மீது வெறுப்பு காட்டினார் சாக்ஷி அகர்வால். இதை கவனித்த லோஸ்லியா, அந்த சாக்லேட்டை கவினிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார். அதை தொடர்ந்து கவின் தெரிவித்த சமாதானத்தை ஏற்க மறுத்தார் லோஸ்லியா. மேலும், சாக்ஷியும் கவின் உடன் சமரசம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். தவிர, இனிமேல் நமக்குள் எதுவும் கிடையாது என்ற ரீதியில் அவர் பேசிவிட்டார். அத்துடன் நேற்று முன் தினம் நிகழ்ச்சி முடிந்தது. இந்நிலையில், நேற்றைய நிகழ்ச்சிக்கான பிக் பாஸ் ப்ரோமோ
 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றையை எபிசோட்டில், தன்னுடைய சாக்லேட்டை லோஸ்லியாவுக்கு வழங்கியதால் கவின்மீது வெறுப்பு காட்டினார் சாக்‌ஷி அகர்வால். இதை கவனித்த லோஸ்லியா, அந்த சாக்லேட்டை கவினிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார். 

அதை தொடர்ந்து கவின் தெரிவித்த சமாதானத்தை ஏற்க மறுத்தார் லோஸ்லியா. மேலும், சாக்‌ஷியும் கவின் உடன் சமரசம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். தவிர, இனிமேல் நமக்குள் எதுவும் கிடையாது என்ற ரீதியில் அவர் பேசிவிட்டார். அத்துடன் நேற்று முன் தினம் நிகழ்ச்சி முடிந்தது. 

இந்த வாரம் கவினுக்கு குறும்படம் நிச்சயம்…!!


இந்நிலையில், நேற்றைய நிகழ்ச்சிக்கான பிக் பாஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் ”நீயா நானா” டாஸ்க்கை தீவிரமாக விளையாடுகின்றனர். அப்போது நேற்று நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு கவினை சாடிப் பேசுகிறார் சாக்‌ஷி அகர்வால். 

டாஸ்கில் நடுவராக இருந்து தொகுத்தி வழங்கும் மீரா, சாக்‌ஷியை சமாதானம் செய்ய முயற்சித்து தோல்வி அடைகிறார். தொடர்ந்து அங்கு வாக்குவாதம் நிலவுகிறது. 

கடைசியாக கவினுடன் எந்த உறவும் இல்லை என்று கூறிவிட்டு சென்றுவிட்டார் சாக்‌ஷி. ஆனால் இவ்வளவு மோசமாக மாற்றி மாற்றி பேசுகிறார் என்பதால் இந்த வாரம் குறும்படம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

From around the web