டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை

டிக் டாக் என்ற செயலி சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்தது .ஆண்ட்ராய்ட் மொபைல் போனில் யார் வேண்டுமானாலும் இந்த செயலியை நிறுவிக்கொள்ளலாம். நமக்கு பிடித்த நடிகர் நடிகைகள், ஸ்டைல்களில் ஒரிஜினல் மியூசிக், காட்சிகளை எம்.பி 3 பைலாக மாற்றி டிக் டாக்கில் அப்லோட் செய்து ஒரிஜினல் நடிகர், நடிகைகள் போலவே பேசி பாடி வருவது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் திறமையை வெளிப்படுத்த பயன்பட்ட இந்த செயலி பின்பு ஆபாசத்தின் உச்சமாய் ஆகி போனது. சில குடும்ப பெண்கள்
 

டிக் டாக் என்ற செயலி சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்தது .ஆண்ட்ராய்ட் மொபைல் போனில் யார் வேண்டுமானாலும் இந்த செயலியை நிறுவிக்கொள்ளலாம்.

டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை

நமக்கு பிடித்த நடிகர் நடிகைகள், ஸ்டைல்களில் ஒரிஜினல் மியூசிக், காட்சிகளை எம்.பி 3 பைலாக மாற்றி டிக் டாக்கில் அப்லோட் செய்து ஒரிஜினல் நடிகர், நடிகைகள் போலவே பேசி பாடி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் திறமையை வெளிப்படுத்த பயன்பட்ட இந்த செயலி பின்பு ஆபாசத்தின் உச்சமாய் ஆகி போனது. சில குடும்ப பெண்கள் மிக ஆபாசமான பாடல்களுக்கு முகம் சுளிக்க வைக்கும் அங்க அசைவுகளை வெளிப்படுத்தி டிக் டாக்கில் பதிவேற்றினர். இதற்கு பலரும் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது.

சில குற்றவாளிகள் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நடந்து செல்லும்போது கூட டிக் டாக் செயலியை பயன்படுத்தி ரொம்ப கெத்தாக ஸ்டேஷன் செல்வது போல் வீடியோ பதிவேற்றினர்.

சீனாவை தலைமையிடமாக கொண்டு இந்த டிக் டாக் நிறுவனம் செயல்படுகிறது.ஏற்கனவே இந்த நிறுவனம் மீது புகார் இருந்தது. பயனாளர்கள் கண்ட விஷயங்களையும் பதிவேற்றி பேசி வருகின்றனர் இது கட்டுப்படுத்தப்படும் என அதன் டிக் டாக் நிறுவனத்தின் இந்தியா தலைமை அறிவித்தது.

இது பல வகையிலும் தொந்தரவாக பலருக்கு இருந்து வருவதாலும் கலாச்சார சீர்கேடாக இருக்கிறது என பலரும் கருத்து சொல்லி வந்த நிலையில் இந்த அப்ளிகேசனை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

From around the web