டிக் டிக் டிக்: திரை விமர்சனம்

இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிவேதா நடிப்பில் உருவாகியுள்ள ‘டிக் டிக் டிக்’ திரைப்படம் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது. இந்த படம் ரசிகர்களை கவர்ந்ததா? என்பதை இப்போது பார்ப்போம் சென்னை அருகே திடீரென ஒரு விண்வெளி கல் குடியிருப்பு பகுதியில் விழுந்து பலர் மரணம் அடைந்துவிடுகின்றனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில் இன்னும் அதைவிட பல மடங்கு விண்வெளி கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், அந்த விண்கல்
 
tik tik tik movie review

டிக் டிக் டிக்: திரை விமர்சனம்

இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிவேதா நடிப்பில் உருவாகியுள்ள ‘டிக் டிக் டிக்’ திரைப்படம் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது. இந்த படம் ரசிகர்களை கவர்ந்ததா? என்பதை இப்போது பார்ப்போம்

சென்னை அருகே திடீரென ஒரு விண்வெளி கல் குடியிருப்பு பகுதியில் விழுந்து பலர் மரணம் அடைந்துவிடுகின்றனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில் இன்னும் அதைவிட பல மடங்கு விண்வெளி கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், அந்த விண்கல் வங்காள விரிகுடாவில் எழுந்தால் சுமார் 1000 அடி சுனாமி உருவாகி இந்தியாவின் பெரும்பகுதி அழிந்து வரைபடத்தையே மாற்றிவ்டும் என்பதையும் இந்திய ராணுவம் கண்டுபிடிக்கின்றது. இதனை தடுத்து நிறுத்த ஒரே வழி அந்த விண்கல் பூமிக்கு நெருங்கும் முன்னரே அதை இரண்டாக பிளந்து சிதறடிக்க வேண்டும். ஆனால் அந்த விண்கல்லை பிளக்க வேண்டுமானால் அதற்கு மிக அதிகளவில் அணுசக்தி வேண்டும். எந்த நாட்டிடமும் அந்த அணுசக்தி இல்லை என்ற நிலையில் சீனா ஒரு பெரும் அளவு அணுசக்தியை விண்வெளியில் மறைத்து வைத்துள்ளதாகவும், அந்த அணுசக்தியை திருடி, விண்கல்லை சிதறடிக்க வேண்டும் என்றும் இந்திய ராணுவம் திட்டமிடுகிறது. ஆனால் அதை திருடுவதற்கு மிக திறமையான திருடன் வேண்டும் என்பதால் அதற்கு ஜெயம் ரவியை ராணுவம் ரகசியமாக தேர்வு செய்கிறது.

டிக் டிக் டிக்: திரை விமர்சனம்பின்னர் ஜெயம் ரவியின் டீமுக்கு பயிற்சி கொடுத்து விண்வெளிக்கு அனுப்பி வைக்கின்றனர். சீனாவின் விண்வெளி மையத்தில் அந்த அணுசக்தி ஏவுகணையை ஜெயம் ரவி திருடினாரா? கோடிக்கணக்கான மக்களை காப்பாற்றினாரா? என்பதுதான் மீதிக்கதை

திருடன் முதல் விண்வெளிவீரர் வரை ஜெயம் ரவிக்கு இந்த படத்தில் பல கெட்டப்புகள். அனைத்திலும் ஸ்கோர் செய்யும் ஜெயம் ரவி, பாசமிகு தந்தையாக மாறி மகன் பெரிதா? நாடு பெரிதா? என்ற கட்டத்தில் அவர் எடுக்கும் முடிவுகள் வரை நடிப்பில் நல்ல ஸ்கோர் செய்துள்ளார்.

தமிழ் சினிமா நாயகி என்றாலே ஹீரோவுடன் டூயட் மட்டுமே பாட வேண்டும் என்ற பார்முலாவை உடைத்து சீரியஸான வேடத்தை நாயகி நிவேதாவுக்கு கொடுத்துள்ளார் இயக்குனர் சக்தி செள்ந்திரராஜன். அதேபோல் ரமேஷ் திலக், அர்ஜூனன், ஜெயப்பிரகாஷ், வின்செண்ட் அசோகன் ஆகியோர்களின் நடிப்பும் பாராட்டப்பட வேண்டியதே.

டி.இமான் இசையில் இரண்டு பாடல்களும் பின்னணி இசையும் சூப்பர். இது இவருக்கு 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறிப்பாக கலை இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்

டிக் டிக் டிக்: திரை விமர்சனம்இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம் என்றாலும் சுத்தமாக லாஜிக்கே இல்லாமல் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சக்தி செளந்திரராஜன். ஆர்மேகடன், கிராவிட்டி, அப்பல்லோ 13 போன்ற படங்களில் உள்ள காட்சியை காப்பி அடித்த தெரிந்த இயக்குனருக்கு அதில் உள்ள லாஜிக்குகளை காப்பியடிக்கவில்லையே என்ற குறை தெரிகிறது. இருப்பினும் இந்த படம் ஒரு சோதனை முயற்சி என்ற அளவிலும், லாஜிக் மீறலை மறந்துவிட்டும் பார்த்தால் ஒரு நல்ல பொழுதுபோக்கு படம்தான் என்பதில் சந்தேகம் இல்லை.

From around the web