தலையில் இடி விழுந்தது! தம்பியை இழந்துவிட்டேன்! பிரபல நடிகர் பேட்டி!

நடிகர் விவேக்கின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிரபல நடிகர் பாஸ்கர்!
 
தலையில் இடி விழுந்தது! தம்பியை இழந்துவிட்டேன்! பிரபல நடிகர் பேட்டி!

மக்களை மகிழ்விப்பதே தங்களது தொழில் என்று பல சினிமா துறையினர் உள்ளனர். இவர்கள் மத்தியில் மக்களை சிரிக்க வைப்பது மட்டுமின்றி மக்களை சிந்திக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிகுந்த தீவிரமாக இருந்தவர் நடிகர் விவேக். நடிகர் விவேக்கின் ஒவ்வொரு திரைப்படத்திலும் காமெடியோடு சேர்ந்து கருத்துக்கள் அதிகமாக காணப்படும். அப்பேர்பட்ட இந்த சின்ன கலைவாணர் விவேக் இன்று அதிகாலை மரணம் அடைந்த தகவல் அனைத்து  திரைத்துறையினர் சோகத்தில் உள்ளாக்கியது.

vivek

மேலும் அவரின் உடலுக்கு திரைத்துறையினர் ரசிகர்கள் இயக்குனர்கள் நடிகர்கள் என்று பலரும் வரிசையில் வந்து மரியாதை செலுத்தினர்.இந்நிலையில் தற்போது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் ஆனது தொடங்கியது. இதில் ஏராளமான சினிமாத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர் .மேலும் அவருக்கு காவல்துறையுடன் மரியாதை செலுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் நடிகர் விவேக்கை நேரில் சந்தித்து அஞ்சலி செலுத்திய நடிகர் பாஸ்கர் செய்தியாளர்களிடம் சில தகவல்களை கூறினார் .

அதன்படி அவர் இன்று காலை இந்த செய்தி தலையில் இடி விழுந்தது என்று அவர் கூறினார். மேலும் அவரது தாயார் மிகவும் அன்பாக இருந்தவர் என்றும் அவர் கூறினார். மேலும் அவர் நடிகர் விவேக் தனது மகனின் இறப்பிற்குப் பின்பு சுதாரித்துக் கொண்டு சமூக பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார் என்றும் கூறினார். மேலும் அவர் தனது உடல் நலத்தில் மிகவும் கவனத்தோடு இருந்தவர் என்றும் கூறினார். இந்நிலையில் காலம் அவரை பிரித்தது மிகுந்த சோகத்தை அளிப்பதாகவும் அவர் செய்தியாளர் மத்தியில் சோகத்தோடு பேட்டி அளித்தார்.

From around the web