த்ரிஷாவாக மாறிய பாவனா

தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது 96 திரைப்படம். இது பல வித பள்ளி ஞாபகங்களை இனிமை கலந்து ஞாபகப்படுத்தியதால் பெரும் வெற்றி பெற்றது. ஜானு என்ற த்ரிஷாவின் கதாபாத்திரம் பேசப்பட்டது. இந்நிலையில் தமிழில் சித்திரம்பேசுதடி, ஜெயம்கொண்டான் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை பாவனா. இவர் கடந்த 2010ம் ஆண்டு அஜித்துடன் அசல் படத்தில் கடைசியாக தமிழில் நடித்தார். அதற்குப்பிறகு மலையாளம், கன்னட படங்களில் கவனம் செலுத்தினார். பல்வேறு
 

தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது 96 திரைப்படம். இது பல வித பள்ளி ஞாபகங்களை இனிமை கலந்து ஞாபகப்படுத்தியதால் பெரும் வெற்றி பெற்றது.

த்ரிஷாவாக மாறிய பாவனா

ஜானு என்ற த்ரிஷாவின் கதாபாத்திரம் பேசப்பட்டது.

இந்நிலையில் தமிழில்

சித்திரம்பேசுதடி, ஜெயம்கொண்டான் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை பாவனா. இவர் கடந்த 2010ம் ஆண்டு அஜித்துடன் அசல் படத்தில் கடைசியாக தமிழில் நடித்தார்.

அதற்குப்பிறகு மலையாளம், கன்னட படங்களில் கவனம் செலுத்தினார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய அவர் கடந்த ஆண்டு தனது நண்பரும், கன்னட பட தயாரிப்பாளருமான நவீனை திருமணம் செய்துகொண்டார்.

அதன் பின்னர் மலையாள படங்களில் நடிப்பதையும் கைவிட்டு கன்னட படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்த ஆண்டு 2 கன்னட படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஜய்சேதுபதி, திரிஷா நடித்து ஹிட்டான 96 படத்தின் கன்னட ரீமேக்காக உருவாகும் 99 படத்தில் திரிஷா கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார் பாவனா.

From around the web