அருள்நிதி, சுதிர்பாபு, விவேக் ஓபராய் இணையும் திரில்லர் படம்!

 

நடிகர் அருள்நிதி தொடர்ச்சியாக திரில்லர் படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது அவர் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமன்றி ஜீவா உடன் நடித்த திரைப்படம் ஒன்றும் ரிலீசுக்கு தயாராக உள்ளது 

இந்த நிலையில் அருள்நிதி நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் இந்த படமும் ஒரு திரில்லர் கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது 

மேலும் இந்த திரைப்படம் ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் தயாராக உள்ளதாக தெரிகிறது. தமிழில் அருள்நிதியும், தெலுங்கில் சுதீர் பாபு மற்றும் ஹிந்தியில் விவேக் ஓபராய் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் மூன்று படங்களும் ஒரே நேரத்தில் தயாராக இருப்பதாகவும் தெரிகிறது 

மூன்று மொழிகளுக்கும் பொருந்தும் வகையிலான ஒரு திரில்லர் கதையம்சம் கொண்ட படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

From around the web