விஜய்யின் அடுத்த படத்தில் மூன்று நாயகிகள்: பரபரப்பு தகவல்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் மாளவிகா மோகன் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தாலும் அந்த படத்தில் ஆண்ட்ரியா மற்றும் ரம்யா ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்திலும் 3 நடிகைகள் நடிக்க உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகவும், மேலும் இந்த படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. விஜய்யின் அடுத்த படத்தில்
 

விஜய்யின் அடுத்த படத்தில் மூன்று நாயகிகள்: பரபரப்பு தகவல்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் மாளவிகா மோகன் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தாலும் அந்த படத்தில் ஆண்ட்ரியா மற்றும் ரம்யா ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்திலும் 3 நடிகைகள் நடிக்க உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகவும், மேலும் இந்த படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

விஜய்யின் அடுத்த படத்தில் நிக்கி கல்ராணி ஒரு முக்கிய நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும், சமந்தா அல்லது காஜல் அகர்வால் இன்னொரு முக்கிய கேரக்டைர்ல் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

அதுமட்டுமின்றி இன்னொரு முன்னணி நடிகை கெளரவ வேடத்திலும் நடிக்கவுள்ளதாகவும் இவர் ஒரு பாலிவுட் நடிகை என்றும் கூறப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் தமன் இசையில் உருவாகும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்போது விஜயுடன் நடிக்கும் நாயகிகள் குறித்த தகவல் வெளிவரும் என்றும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

From around the web