மூன்று பிறந்தநாள்! மூன்று பிரபலம்!

ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் மூன்று பிரபலங்கள்!
 
வாழ்த்துக்கள் கூறும் நடிகர் கோபிநாத்தின் ட்விட்டர் பக்கம்!

பிப்ரவரி 17ஆம் தேதி ஆகிய இன்று பிரபல நடிகரும், கதாநாயகனும் ஆன நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் கொண்டாடுகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய "கேடி பில்லா கில்லாடி ரங்கா", "எதிர்நீச்சல்", "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" ஆகிய மூன்று திரைப்படங்களும் தொடர்ந்து வெளியாகி "பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது". இதனால் நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களை தன் வசம் இழுத்துக் கொண்டார். குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன் குழந்தை ரசிகர்களை தன் வசம் இழுத்துக் கொண்டார். அதன் பிறகு அவர் நடிப்பில் வெளியாகிய "ரஜினிமுருகன்", "ரெமோ"" திரைப்படங்கள் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று நல்ல முறையாக ஓடியது.

DD

பிப்ரவரி 17ஆம் தேதி ஆகிய இன்று மேலும் ஒரு பிரபலம் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் "நடிகை", "தொகுப்பாளினி" என பல்வேறு முகங்களைக் கொண்ட நடிகை திவ்யதர்ஷினி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.


மேலும் ஒரு பிரபலம் பிப்ரவரி 17ஆம் தேதி ஆகிய இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் பிக் பாஸ் சீசன்4ன் போட்டியாளரும், கதாநாயகனும் ஆகிய "நடிகர் ரியோ ராஜ்" தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்நிலையில் பிரபல பேச்சாளரும், நடிகருமான "கோபிநாத்" தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த மூன்று பிரபலங்களுக்கும் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"ஒரே நாளில் பிறந்திருந்தாலும் ஒவ்வொரு வகையில் தனித்துவம் பெற்றவர்கள் நீங்கள். மூவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்' இவ்வாறு கூறியுள்ளார் "கோபிநாத்.

From around the web