இந்த ஆண்டு தளபதி விஜய்யின் தீபாவளி: உற்சாகத்தில் ரசிகர்கள்

 

வரும் தீபாவளி அன்று ஒரு சில முக்கிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதாகவும், சில மாஸ் நடிகர்களின் படங்களின் டீசர் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி உள்ளதாகவும் வெளிவந்த அறிவிப்புகளை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ‘மாஸ்டர்’ படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு ‘மாஸ்டர்’ படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்று ‘மாஸ்டர்’ படத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியானதை அடுத்து இந்த டீசரை வரவேற்க விஜய்யின் கோடிக்கணக்கான ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் 

master teaser

கடந்த சில நாட்களாக விஜய் மற்றும் அவரது தந்தைக்கு இடையே ஏற்பட்ட அரசியல் கருத்து வேறுபாடு காரணமாக விஜய் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்த நிலையில் அந்த சம்பவத்தை மறக்கடிக்கும் வகையில் ‘மாஸ்டர்’ படத்தின் டீஸர் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீபாவளிக்கு விஜய்யின் படம் வெளியாகவில்லை என்றாலும் அவரது படத்தின் டீசர் வெளியாவதால் இந்த தீபாவளி விஜய்யின் தீபாவளியாக கருதப்படுகிறது

From around the web