இந்த விஷயம் பெரிய அளவில் மனதினை பாதித்தது… சமந்தா பேட்டி!!

நடிகை சமந்தா மாஸ்கோவின் காவிரி என்னும் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார். அடுத்து தெலுங்கில் ஏ மாயா சேசவா திரைப்படத்தில் நடிக்க அது மாஸ் ஹிட்டானது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் வந்திருந்தாலும் அழகால் தமிழ் இளைஞர்களின் மனதில் பதிந்துவிட்டார். அடுத்து பாணா காத்தாடி படம் இவருக்கு ஓரளவு வரவேற்பினைக் கொடுத்தது, அதன்பின்னர் தெலுங்கு சினிமாவிலேயே கொடி கட்டிப் பறந்த இவர் நான் ஈ படத்தின்மூலம் தமிழில் மிகவும் பிரபலமானார். முன்னணி நடிகையாக
 
இந்த விஷயம் பெரிய அளவில் மனதினை பாதித்தது… சமந்தா பேட்டி!!

நடிகை சமந்தா மாஸ்கோவின் காவிரி  என்னும் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார். அடுத்து தெலுங்கில் ஏ மாயா சேசவா திரைப்படத்தில் நடிக்க அது மாஸ் ஹிட்டானது.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் வந்திருந்தாலும் அழகால் தமிழ் இளைஞர்களின் மனதில் பதிந்துவிட்டார். அடுத்து பாணா காத்தாடி படம் இவருக்கு ஓரளவு வரவேற்பினைக் கொடுத்தது, அதன்பின்னர் தெலுங்கு சினிமாவிலேயே கொடி கட்டிப் பறந்த இவர் நான் ஈ படத்தின்மூலம் தமிழில் மிகவும் பிரபலமானார்.

முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதோடு பாலிவுட் வெப் சீரியஸ்களிலும் நடித்து வருகிறார்.

இந்த விஷயம் பெரிய அளவில் மனதினை பாதித்தது… சமந்தா பேட்டி!!

இந்தநிலையில் நடிகை சமந்தாவின் பேட்டியில், “நான் சினிமாப் பயணத்தைத் துவக்கிய காலங்களில் நான் நினைத்த மாதிரியான கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெறவில்லை. அது அப்போது பெரிய அளவில் மனதினை பாதித்தது.

ஆனால் இப்போது யோசிக்கையில், அந்த வயதில் நான் நடித்த திரைப்படங்கள் அந்த வயதிற்கு ஏற்றவையே. அப்போது என்னால் கதாநாயகிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்திருக்க முடியாது.

தனி அடையாளத்தைப் பெற பல ஆண்டுகள் ஆயினும், நான் சினிமா வாழ்க்கையில் முதிர்ச்சி அடைந்ததாய் நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

From around the web