நெருங்கிய நண்பனுக்காக சூர்யா ரிலீஸ் செய்தது இதுதான்!

 

நடிகர் சூர்யா கடந்த சில நாட்களாக ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம் பெற்றிருக்கும் நிலையில் இன்று தன்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவருக்காக ஆல்பம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் 

நடிகர், பாடகர், இசை அமைப்பாளரான கிரிஷ் பிரபல நடிகை சங்கீதாவின் கணவர் என்பது தெரிந்ததே. இந்நிலையில் கிரிஷ் உருவாக்கியுள்ள பக்தி பாடல் ஆல்பமாக வெற்றிவேலா என்ற ஆல்பத்தை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் 

சோனி நிறுவனம் தயாரித்துள்ள இந்த மியூசிக் ஆல்பத்தின் பாடல்கள் அனைத்தும் தற்போது வைரல் ஆகி வருகின்றன. வெற்றிவேலா என்ற பெயருடைய இந்த ஆல்பம் முருக பக்தர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது

அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்ச்சோலை குறித்த பாடல்கள் இந்த ஆல்பத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web