சிம்பு அப்போவே சொன்னார் இப்பிடித்தான் ஆகும்னு… கௌதம் மேனன் பேட்டி!!

வருடங்களே உருண்டோடினாலும் விண்ணைத் தாண்டி வருவாயா காதலர்கள் மத்தியில் கொண்டாடப்படும் ஒரு படமாகும். தற்போது விண்ணைத் தாண்டி வருவாயா பார்ட் 2 எடுக்கத் திட்டமிட்டுள்ள கௌதம் மேனன், அதன் முன்னோட்டமாக கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோதும் இக்குறும்படம் வீட்டில் இருந்தபடியே மிகவும் மெனக்கெட்டு படமாக்கப்பட்டது. இது ரசிகர்களைக் குஷிப்படுத்தியதோ இல்லையோ மீம் கிரியேட்டர்ஸை நன்றாகவே குஷிப்படுத்தியது. ஆமாங்க போதும் போதும் சொல்ற அளவு வெச்சு செஞ்சுட்டாங்கன்னா
 
சிம்பு அப்போவே சொன்னார் இப்பிடித்தான் ஆகும்னு… கௌதம் மேனன் பேட்டி!!

வருடங்களே உருண்டோடினாலும் விண்ணைத் தாண்டி வருவாயா காதலர்கள் மத்தியில் கொண்டாடப்படும் ஒரு படமாகும். தற்போது விண்ணைத் தாண்டி வருவாயா பார்ட் 2 எடுக்கத் திட்டமிட்டுள்ள கௌதம் மேனன், அதன் முன்னோட்டமாக கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோதும் இக்குறும்படம் வீட்டில் இருந்தபடியே மிகவும் மெனக்கெட்டு படமாக்கப்பட்டது.  இது ரசிகர்களைக் குஷிப்படுத்தியதோ இல்லையோ மீம் கிரியேட்டர்ஸை நன்றாகவே குஷிப்படுத்தியது.

ஆமாங்க போதும் போதும் சொல்ற அளவு வெச்சு செஞ்சுட்டாங்கன்னா பாத்துக்கோங்க. அதிலும் த்ரிஷா கூறும் வசனமான நீதான் என்னோட 3 வது குழந்தை டயலாக் தான் அதுல ஹைலைட்டே..

சிம்பு அப்போவே சொன்னார் இப்பிடித்தான் ஆகும்னு… கௌதம் மேனன் பேட்டி!!

சிலர் இதனைக் காதல் படமாக இருந்த விண்ணைத் தாண்டி வருவாயா படத்தினை கள்ளக் காதல் படமாக ஆக்கிட்டீங்களை என்று விமர்சித்ததோடு, கூடுதலாக சிம்பு குழந்தையாக இருப்பது போன்றும் அந்தக் குழந்தையினை சிம்பு கையில் ஏந்தி இருப்பது போன்றும் மீம்ஸ்கள் வைரலாக வலம் வந்து கொண்டுள்ளன.

இதுகுறித்துப் பேசிய கௌதம் மேனன், “நீ எனக்கு மூன்றாவது குழந்தை என்ற டயலாக்கை சொல்லும் போதே சிம்பு என்னிடம், திரிஷா மடியில் நான் இருப்பது போன்ற புகைப்படம் மீம்ஸ்களாக வரும் என்று கூறினார்.“ என்று வேடிக்கையாகப் பதில் கூறியுள்ளார்.

From around the web