சாக்ஷி வெளியேற்றப்படக் காரணம் இதுதான்!!

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 வது நாளை முடித்த நிலையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, 50 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், சரவணன் ஆகியோரைத் தொடர்ந்து சாக்ஷியும் வெளியேற்றப்பட்டுள்ளார். வனிதா போன பிறகு டி ஆர் பியை ஓரளவு தூக்கி நிறுத்தியவர் பிரச்சினை நாயகி மீரா, வனிதா இடத்தை தன்னால் முடிந்த அளவு நிரப்பவே செய்தார். ஆனால் அவரும் சேரனுடனான பிரச்சினையால் மக்களின் ஆதரவினை இழந்து வெளியேறினார். அதன் பின்னர்
 
சாக்ஷி வெளியேற்றப்படக் காரணம் இதுதான்!!

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 வது நாளை முடித்த நிலையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, 50 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், சரவணன் ஆகியோரைத் தொடர்ந்து சாக்ஷியும் வெளியேற்றப்பட்டுள்ளார்.

வனிதா போன பிறகு டி ஆர் பியை ஓரளவு தூக்கி நிறுத்தியவர் பிரச்சினை நாயகி மீரா, வனிதா இடத்தை தன்னால் முடிந்த அளவு நிரப்பவே செய்தார்.

சாக்ஷி வெளியேற்றப்படக் காரணம் இதுதான்!!

ஆனால் அவரும் சேரனுடனான பிரச்சினையால் மக்களின் ஆதரவினை இழந்து வெளியேறினார்.

அதன் பின்னர் நிகழ்ச்சிக்கு தீனி போட்டவர், சாக்ஷியும், கவினும் தான். அவர்களின் காதலில் பிளவு ஏற்படுவதும் அனைவரும் பஞ்சாயத்து பண்ணுவதும், லோஸ்லியா கவினிடம் நட்பு கொள்வதும், சாக்ஷி இதனால் அழுவதும், இதனால் லோஸ்லியா கவினிடம் இருந்து விலகுவதும், மீண்டும் சாக்சிக்கு தெரியாமல் நட்பினைத் தொடருவதுமாக இந்த முக்கோணக் காதலிலேயே பிக் பாஸ் போனது.

ஒரு நிலைக்கு மேல் இதனைப் பார்க்க ஒரு சீரியல் போலவே தெரிந்தது, அதனாலோ என்னவோ தான் பிக் பாஸ் சாக்ஷியை வெளியேற்றிவிட்டார் என்பது போலத் தெரிகிறது.

இல்லையெனில் இந்தப் பிரச்சினைகள் மட்டும் பிக் பாஸ் வீட்டில் நடைபெறும், இதனால் டிஆர்பி அடி வாங்க வாய்ப்பிருக்கும் என்று எண்ணிய பிக் பாஸ் சாக்ஷியை வெளியேற்றிவிட்டார். வெளியில் வருத்தப்படுவது போல் காட்டிக் கொண்டாலும், லோஸ்லியாவும் கவினும் உள்ளூர மகிழ்ச்சியில் உள்ளனர்.

From around the web