என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களே மா...!

இந்தக் காரணமாகத்தான் மாஸ்டர் படத்தில் இக்காட்சி நீக்கப்பட்டது...!
 
வெளியானது மாஸ்டர் படத்தில் இக்காட்சி நீக்கியதற்கான  காரணம்...!

இந்த பொங்கலுக்கு வெளியாகி வேற லெவலாக  ஓடிக்கொண்டிருக்கும் படம் "மாஸ்டர்". இத்திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்து இருந்தார். இத்திரைப்படத்தினை திரைப்பட" கைதி " இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.இத்திரைப்படத்தில் தளபதி விஜய் "கெட்டப்" மற்றும் "ஸ்டைல்" மக்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மேலும் இப்படத்தில் இவருடன் "நடிகை மாளவிகா மோகன்", "நடிகை ஆண்ட்ரியா" மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

master

இவர்களுடன் "மக்கள் செல்வன்" என்றழைக்கப்படும் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார் இவர் இத்திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்திருப்பது மக்களிடையே மிகுந்த வரவேற்பையும் ,ஆனந்தத்தையும் பெற்றுள்ளது.இத்திரைப்படம்  வெளியாகி  20 நாட்களுக்கு மேல் கடந்த நிலையில் இன்றும் பல தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டுதான் உள்ளது .

மேலும் இத்திரைப்படத்தில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு காட்சி நீக்கப்பட்டிருந்தது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தந்தது.இதனால் ரசிகர்களின் ஆனந்தப்படுத்தும் எண்ணத்தோடு படக்குழு நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டது. அக்காட்சியில் தளபதி விஜய் மற்றும் "96 ஜானு" என்று அழைக்கப்படும் நடிகை  கௌரி ஜி. கிஷன் இருப்பார்கள். சீரியஸான அந்த சீனில் நடிகை கௌரி ஜி. கிஷன் சிரித்தால் அக்காட்சி நீக்கப்பட்டது என ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

From around the web