இவர் காட்டில  லைக்ஸ் மழைதான் பெய்துப்பா...!

வெளியாகிய சில மணி நேரத்தில் வைரலாக பரவி வரும் "டாப் டக்கர்"...!
 
"டாப் டக்கர்" பாடல் குறித்து நடிகர் யுவன் சங்கர் ராஜா ட்விட்டர் பக்கம் கூறும் கருத்து...,

வெளியாகிய சில மணி நேரத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது "டாப் டக்கர்" பாடல். இப்பாடலில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருக்கும் "நடிகை ரஷ்மிகா மந்தனா" நடித்துள்ளார். "நடிகை ரஷ்மிகா மந்தனா" நடிப்பில் வெளியாகியது "கீதா கோவிந்தம்" என்ற திரைப்படம். இவருக்கு மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இதனால் இவர் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தார். மேலும் இவர் நடிகர் விஜய்தேவரகொண்டா உடன் "டியர் காம்ரேட்" என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். மேலும் இவர் நடிகர் நித்தினுடன் "பீஷ்மா" என்ற படத்திலும் நடித்துள்ளார்.

top tucker

மேலும் தமிழ்சினிமாவில் "கைதி"," தீரன்அதிகாரம்ஒன்று" போன்ற பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் கார்த்தியுடன் "சுல்தான்" என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார். தற்போது தான் நடித்த "டாப் டக்கர்" திரைப்படத்தின் பாடல் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அப்பாடலுக்கு பிரபல இசையமைப்பாளர் "யுவன் சங்கர் ராஜா" இசையமைத்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக்கிய  இப்பாடல் இந்திய சினிமா ரசிகர்களின் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இப்பாடல் குறித்து யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார்.

"அனைத்து மனம் நிறைந்த மற்றும் இதயமுள்ள பஞ்சாபிகளுடன் இந்தி பாதையில் எனது முதல் ஒத்துழைப்பு
# டாப்டக்கருடன் ஒரு வேடிக்கையான சவாரிக்கு நீங்கள் செல்லும்போது உங்களை நீங்களே இணைத்துக் கொள்ளுங்கள்- இப்போது உங்களுடையது" என்று யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

From around the web