’சூரரை போற்று’ பொம்மியின் அடுத்த படம் இதுதான்!

 

சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் சமீபத்தில் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் அபாரமான நடிப்பு சுதா கொங்கராவின் அற்புதமான திரைக்கதை அபர்ணா பாலமுரளி இயல்பான நடிப்பு என இந்த படத்தின் அனைத்து அம்சங்களும் பாசிட்டிவ் ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இந்த படத்தில் மிக அருமையாக ஒளிப்பதிவு செய்தவர் நிகோத் பொம்மி என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இவருடைய அடுத்த படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது 

nani nazriya

தெலுங்கு திரையுலகின் நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கயிருக்கும் 28வது திரைப்படத்தில் நஸ்ரியா நடிக்க உள்ளார். தமிழ் மலையாளத் திரைப்படங்களில் மட்டும் நடித்துக்கொண்டிருந்த நஸ்ரியா நடிக்கும் முதல் தெலுங்கு படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இந்த படத்தில்தான் சூரரைப்போற்று ஒளிப்பதிவாளர் நிகோத் பொம்மி ஒளிப்பதிவாளராக பணி செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்றை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர் என்பதும் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web