சித்ரா வாழ்வின் மிக முக்கியமான நாள் இது

இன்று சித்ரா ஹேமந்த் என்பவரை திருமணம் செய்ய வேண்டிய நாள்.

 

கடந்த டிசம்பர் 9ம் தேதி தற்கொலை செய்துகொண்டு இறந்தவர் நடிகை சித்ரா. குடும்ப ஆதரவு இல்லாமல் முதலில் தொலைக்காட்சிக்கு வந்து பின் சாதனை படைத்தவர்.

மிகவும் தைரியமான பெண்ணான இவர் திடீரென தற்கொலை செய்துகொண்டு இறந்தது அனைவருக்கும் அதிர்ச்சி தான்.

சித்ரா, ஹேமந்த் என்பவரை திருமணம் செய்ய இருந்தார், நிச்சயதார்த்தம் எல்லாம் நடந்தது. அவர்களின் திருமணம் இன்று தான் (பிப்ரவரி 10) பிரம்மாண்டமாக நடக்க இருந்தது.

இன்று ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் இருந்திருக்க வேண்டிய சித்ரா இப்போது நம்முடன் இல்லையே என அவரது ரசிகர்கள் வருத்தமாக பதிவுகள் போட்டு வருகின்றனர்.

From around the web