எஸ்பிபி சரண் கூறிய நல்ல செய்தி இதுதான்

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வரும்
 

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வரும் திங்கட்கிழமை எஸ்பிபி அவர்கள் உடல்நிலை குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தியை கூற இருப்பதாக எஸ்பிபி சரண் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார் என்பது ஏற்கனவே தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன் எஸ்பிபி சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு விட்டார் என்றும் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் 

மேலும் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் தனது ஐபேட் உதவியால் கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் விளையாட்டைப் பார்த்து ரசித்து வருவதாகவும் அவர் சைகையின் மூலம் தங்களிடம் பேசுகிறார் என்றும் எஸ்பிபி சரண் தெரிவித்தார். ஆனால் அதே சமயத்தில் அவர் எக்மோ மற்றும் வென்டிலேட்டர் கருவியின் உதவியால்தான் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்

எஸ்பிபி அவர்கள் முழுமையான குணம் அடைய இன்னும் சிறிதுகாலம் ஆகும் என்றாலும் அவர் நிச்சயம்  பழைய நிலைக்கு திரும்பி விடுவார் என்றும் எஸ்பிபி சரண் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எஸ்பிபி சரண் தெரிவித்த இந்த நல்ல செய்தி அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

From around the web